eye irritation remedy in tamil
பொதுவாகவே மனிதராக பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு பழக்கம் இருக்க தான் செய்யும். உதாரணத்திற்கு, அடிக்கடி நகத்தை கடிப்பது, விரலில் சொடிக்கெடுப்பது, தலையை சொரிவது மற்றும் கண்களை தேய்த்து கொண்டே இருப்பது என ஏராளமான பழக்கங்கள் இருக்கும். ஒவ்வொருவரின் பழக்கம் என நாம் அதனை சாதாரணமாக கடந்து விடுகிறோம். இவற்றில் சில பழக்கங்களால் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது. அந்த வகையில், நாம் இப்போது அடிக்கடி கண்களை தேய்க்கும் பழக்கத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
உங்களுக்கே தெரியாமல் நீங்கள் அடிக்கடி கண்களை தேய்த்துக் கொண்டே இருக்கிறீர்களா? இதற்கு காரணம் என்னவென்று யோசித்தது உண்டா? தூசி, மாசு, தூக்கம் வருவது அல்லது கண் தொற்று போன்றவற்றால் கண்களில் அரிப்பு ஏற்படக்கூடும். கண்களை தேய்ப்பது இது போன்ற பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு கிடையாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். சரியான வைத்தியத்தை மேற்கொள்ளாது, கண்களை தேய்க்க முற்பட்டால் மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வறண்ட கண்கள், கண் எரிச்சல் அல்லது தூசி விழுந்ததால் ஏற்படக்கூடிய அரிப்பு போன்றவற்றை சரியான நேரத்தில் முறையாக கவனித்தே ஆக வேண்டும். இன்னும் சில சமயங்களில், அலர்ஜியால் கூட கண்களில் அரிப்பு ஏற்பட்டு, பின்னர் கண் சிவந்து, வீங்குவதற்கும் வாய்ப்புள்ளது. அதுப்போன்ற தருணங்களில், கண்களை தொடர்ந்து தேய்த்தால், அலர்ஜி கண் முழுவதும் பரவிவிடும். எனவே, கண்களில் அரிப்பு ஏற்படும் போதெல்லாம் மேற்கொள்ள வேண்டிய சில கை வைத்தியங்களைப் பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்...
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிர்ச்சியான நீரில் நனைத்த துணி
நமக்கு ஏற்படக்கூடிய பெரும் அசௌகரியங்களில் ஒன்று கண் அரிப்பு. கண் அரிக்க தொடங்கினால், வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. அதுபோன்ற தருணங்களில், ஒரு சுத்தமான துணியை குளிர்ந்த நீரில் நனைத்து கண்களின் மீது வைக்க வேண்டும். இது பழைய வைத்திய முறையென்றாலும் கூட, மிக சிறந்த ஒன்று. சோர்வு, தூசி போன்றவற்றால் ஏற்படக்கூடிய அரிப்புகளுக்கு இது மிகவும் சிறந்த தீர்வாகும். இது கண்களை நிதானமாக்கி, அரிப்பிலிருந்து விடுபட உதவிடும்.
கற்றாழை ஜூஸ்
சரும பராமரிப்பில் முக்கிய இடத்தை பிடிக்கும் கற்றாழை ஜெல்லானது, கண் அரிப்பிற்கு ஏற்ற மற்றொரு சிறந்த வைத்திய முறையாகும். மிக்ஸர் ஜாரில் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு ஜஸ் கட்டி துண்டு மற்றும் ஒரு டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். தயார் செய்ய கலவையை ஒரு பவுளில் ஊற்றி கொள்ளவும். சிறிது பஞ்சில் தயார் செய்ய குளிர்ந்த கற்றாழை கலவையை தொட்டு, கண்களின் மீது வைக்கவும். 2 முதல் 3 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்க, உடனடி பலன் கிடைக்கும்.
குளிர்ந்த பால் மற்றும் ரோஸ் வாட்டர்
பால் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டுமே சருமத்திற்கு மிகுந்த நன்மை பயக்கக்கூடியவை. கண் அரிப்பை போக்கவும் இவை சிறந்து உதவக்கூடியவை. அதற்கு, சரிசம அளவில் குளிர்ந்த பால் மற்றும் ரோஸ் வாட்டரை எடுத்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை, சிறிது பஞ்சில் தொட்டு கண்களின் மீது வைத்திருக்க, கண் அரிப்பு உடயே நீங்கி விடும்.
சீமைச்சாமந்தி சாறு
கெமோமில் எனப்படும் மூலிகை குணம் நிறைந்த சீமைச்சாமந்தி பூவானது, பெரும்பாலும், தேநீர் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது கண் அரிப்புக்கும் மிகச்சிறந்த தீர்வு என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. உங்களால் முடியுமானால் சீமைச்சாமந்தி பூவையே பயன்படுத்தலாம் அல்லது சீமைச்சாமந்தி எண்ணெய் அல்லது சீமைச்சாமந்தி தேநீர் பையை கூட தாராளமாக பயன்படுத்தலாம். மிகவும் சுலபமாக கிடைக்கக்கூடியது சீமைச்சாமந்தி தேநீர் பை ஆகும். கண் அரிப்பால் அவதிப்படுபவர்கள், சீமைச்சாமந்தி தேநீர் தயாரித்து, பயன்படுத்திய தேநீர் பையை உறை குளிர் நிலையில் வைக்கவும். பின்னர், அதனை எடுத்து கண்களின் மீது வைக்க கண் அரிப்பு போய்விடும்.
பெருஞ்சீரகம்
பெருஞ்சீரகம் அல்லது சோம்பு ஒரு புத்துணர்ச்சியூட்டக்கூடிய பொருள் மட்டுமல்ல. இது கண் பிரச்சனைகளுக்கு உதவக்கூடிய சக்திவாய்ந்த வீட்டு வைத்திய முறையாகும். ஒரு கப் தண்ணீரில், ஒரு டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகத்தை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பெருஞ்சீரக நீரை தயார் செய்து கொள்ளவும். தயாரித்த கலவை நன்கு ஆறி, குளிர்ந்த நிலைக்கு வந்த பிறகு, அந்த நீரை கொண்டு கண்களை கழுவவும்.
கொத்தமல்லி விதைகள்
கொத்தமல்லி ஒரு பொதுவான மசாலா பொருட்களில் ஒன்று. இது ஒரு கண் அரிப்பிற்கு தீர்வினை வழங்கிடும் என்றால், உங்களால் நம்ப முடியாது. ஆனால், கண் அரிப்புகளை எளிதாக இது விரட்டிடும். கண்களில் ஏற்படக்கூடிய அழற்வியை அகற்ற கொத்தமல்லி உதவுவதற்கு காரணம், அதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தான். மேலும், இது கண் வறட்சியை போக்கிடவும் உதவுகிறது. ஒரு பாத்திரத்தில், அரை கப் தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை சேர்த்து கொதிக்க விடவும். பின்னர், அந்த நீரை குளிர வைக்கவும். இப்போது, குளிந்த நீரை கொண்டு கண்களை கழுவவும். மாற்றாக, தயாரித்த நீரில் சில துளிகளை கண்களுக்குள் நேரடியாகவும் விடலாம்.
முடிவு
கண்களில் ஏற்படக்கூடிய அரிப்பு அல்லது எரிச்சல் தொடர்ந்தால், எவ்வித தாமதமுமின்றி, உடனே கண் மருத்துவரை சந்தியுங்கள். ஏனெனில் இவை மோசமான விளைவுகளை கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளது. வீட்டு வைத்தியங்களை மேற்கொள்வது உடனடி நிவாரணம் பெற உதவும். ஆனால், கண்களில் எரிச்சல் நீடிக்கும் பட்சத்தில் அவற்றை ஒருபோதும் புறக்கணிக்கவே கூடாது.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
eye irritation remedy in tamil
Source: https://tamil.boldsky.com/health/wellness/home-remedies-for-itchy-eyes-in-tamil-029389.html
Posted by: lucastaidef.blogspot.com

0 Response to "eye irritation remedy in tamil"
Post a Comment